குறுந்தொகை: பாடல் 58

குறுந்தொகை 58 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக

நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;

ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்

கை இல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!

கழற்றெதிர்மறை

வெள்ளிவீதியார்

இடிக்கும் கேளிர் -குற்றம் கண்ட தலைவனை இடித்துக் கூறி,திருத்த முயலும் பாங்கன்

கேளிர்! நும் - பன்மைச் சொற்கள்(பாங்கனை மட்டும் குறிக்கும்)

குறை -நுமது செயல்

அறை- பாறை

மன்தில்ல -விழைவு/விருப்பம்

உணங்கு -உலர்/உலர வைத்தல்

உணங்கல் -உலர்தல் /உலர்ந்த பொருள்(வெண்ணெய்)

வெண்ணெய் (5முறை)

வெண்ணெய்க்கும் (1முறை)

வெண்ணெயின் (1முறை)

நன்றி

http://tamil concordance.in