குறுந்தொகை: பாடல் 59

குறுந்தொகை 59 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்

அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்

குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்

தவ்வென மறப்பரோ மற்றே; முயலவும்,

சுரம் பல விலங்கிய அரும் பொருள்

நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.

பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது

மோசிகீரனார்

பதலை - ஒருகட் கிணைப் பறை

பாணி- தாளம்

பரிசிலர் - பாணர் முதலியோர்

கோமான் - இரவலரைப் புரக்கும் தலைவன் / வேந்தன்

அதலைக் குன்றம் - ஒரு மலை

குண்டு சுனை - ஆழ்ந்த சுனை

பொதிந்த - கட்டப்பட்ட

குளவி - காட்டு மல்லிகை/மலைப்பச்சை

மறப்பரோ - மறவார் (ஓகாரம் எதிர்மறை)

மற்றே - மற்று +ஏ (அசை)

விலங்கிய - குறுக்கிட்ட

அரும் பொருள் - தேடுதற்கு அரிய பொருள்

நீடல் - காலம் தாழ்த்து இருத்தல்

நன்றி

http://tamil concordance.co.in