குறுந்தொகை: பாடல் 60

குறுந்தொகை 60 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்

பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்,

உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து,

சுட்டுபு நக்கியாங்கு, காதலர்

நல்கார் நயவார் ஆயினும்,

பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே.

பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது

பரணர்

கூதளி - கொடி

இருங்கால் முடவன் - இருத்தல் தொழில் மட்டும் உடையவன் (மாற்றுத்திறனாளி )

உள் கை - உள்ளங்கை

சிறு குடை- பனைஓலை முதலியவற்றால் செய்த சிறு உண்கலம்

சுட்டுபு - சுட்டிக்காட்டி

***

கூதளம்/கூதளி/வெண்கூதாளம்

தாளிக்கொடி: மஞ்சிகம்

மஞ்சிகை

**

பாட பேதம் ----------------------

இருக்கை முடவன் – கழகப்பதிப்பு

நன்றி:http: // tamil concordance.com