குறுந்தொகை: பாடல் 61
குறுந்தொகை 61 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது.
தும்பிசேர்கீரன்
சிறு மா வையம் - தச்சன் செய்த குதிரை வண்டி
வையம் - ஊர்தி
ஈர்த்து - இழுத்து
உற்று இன்புறுதல் - மெய்யுறு புணர்ச்சியால் இன்புறுதல்
பொய்கை ஊரன் - மருத நிலத் தலைவன்
புலவர் தும்பிசேர் கீரனார்
------------------------------------------------
தும்பியைப் பற்றிப் பாடியவர்:எனவே பெயருக்கு முன் தும்பியை இணைத்து , பிற புலவரிடமிருந்து வேறுபடுத்தினர்.
மணிச் சிறைத் தும்பி(குறுந்.392: 1)
கொடியை வாழி தும்பி (நற்றிணை 277:1)
நன்றி
http:// tamil concordance.
