குறுந்தொகை: பாடல் 62
குறுந்தொகை 62 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது
சிறைக்குடி ஆந்தையார்
கோடல் - காந்தள் மலர்
எதிர்முகைப் பசு வீ
முல்லை - அரும்பி மலராத நிலையிலுள்ள பசிய பூவும் முல்லையும்
நாறிதழ்க் குவளை - மணங்கமழும் மலர்
ஐது - அழகிது
தொடை - தொடுத்தல்
மாண்ட - மாட்சிமைப்பட்ட
கோதை - மாலை
நறிய - மேனி (தலைவி)
மேனி – உடம்பு (ஆகுபெயர்)
முறி - மாந்தளிர்
முயங்குதல் - தழுவுதல்
