குறுந்தொகை: பாடல் 63

குறுந்தொகை 63 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்'' எனச்

செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு

அம் மா அரிவையும் வருமோ?

எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே!

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது

உகாய்க்குடி கிழார்

ஈதல் - வறியோர் இன்மை தீரக் கொடுத்தல்

துய்த்தல் - ஐம்பொறியானும் புலன்களை ஆர நுகர்தல்

செய்வினை - பொருள் செய்வதற்குரிய தொழில்

கைம்மிக எண்ணுதல் - மேலும் கருதுதல்

http://tamil concordance.in