குறுந்தொகை: பாடல் 64
குறுந்தொகை 64 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம் வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர் தோழி! சேய் நாட்டோரே.
பிரிவிடை ஆற்றாமை கண்டு, ''வருவர்'' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கருவூர்க் கதப்பிள்ளை
பல் ஆ - பலவாகிய ஆன்கள்
நெடு நெறி- தூரிய வழி/ தூர வழி
அகன்று வருதல் - பிரிந்து போதல்
அலம்- துன்பம்
சேய்மை - காலச்சேய்மை
சேய் நாடு- தூர நாடு
