குறுந்தொகை: பாடல் 65

குறுந்தொகை 65 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன்

இன்புறு துணையொடு மறுவந்து உகள,

தான் வந்தன்றே, தளி தரு தண் கார்

வாராது உறையுநர் வரல் நசைஇ

வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

கோவூர் கிழார்

வன் பரல் - வன்மை உடைய பருக்கைக் கற்கள்

அறல் - அறுத்துச் செல்லும் நீர்/ஓடிக் கொண்டிருக்கும் நீர்

இரலை – கலைமான்

உகளுதல் - துள்ளி விளையாடுதல்

இன்புறு துணை - பிணை மான்

மறு வந்து - மீண்டு வந்து

தான் - அசை

தளி தரு தண் கார் மழைத் துளி வழங்கும் கார்ப்பருவம்

தண் கார் - தண்ணளி உடைய கார்