குறுந்தொகை: பாடல் 66

குறுந்தொகை 66 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

மடவ மன்ற, தடவு நிலைக் கொன்றை

கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய

பருவம் வாரா அளவை, நெரிதரக்

கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,

வம்ப மாரியைக் கார் என மதித்தே.

பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறீஇயது

கோவர்த்தனார்

மடவ - அறியாமை உடையன

மன்ற - தேற்றம்/உறுதி/தெளிவு

தடவு நிலை - பரிய அடி மரம்

கல் - மலை

பிறங்குதல் - வெயிலால் விளங்குதல் விளங்குதல்

அத்தம் - அருவழி

பருவம் - கார்ப்பருவம்

நெரிதல் - செறிதல்

கொடி இணர் - பூங்கொத்து

ஊழ்த்தல் - மலர்தல்

வம்பு - நிலையின்மை (தொல்.உரியியல்)

வம்ப மாரி - வேனிற் காலத் திடீர் மழை