குறுந்தொகை: பாடல் 67
குறுந்தொகை 67 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
உள்ளார் கொல்லோ தோழி! கிள்ளை
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது
அள்ளூர் நன்முல்லையார்
உள்ளல்- நினைத்தல்/எண்ணுதல்
கிள்ளை - கிளி
வளை வாய் - வளைவு உடைய வாய்/அலகு
புது நாண் - புதிய நூல்
நுளைப்பான் - நுளைக்கும் பொருட்டு(பான் விகுதி பெற்ற வினையெச்சம்)
