குறுந்தொகை: பாடல் 68

குறுந்தொகை 68 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்

ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்

அரும் பனி அற்சிரம் தீர்க்கும்

மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.

பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது.

அள்ளூர் நன்முல்லையார்

பூழ் - குறும்பூழ்:காடை/சிறு பறவை

ஊழ்ப்படுதல்- மலர்தல் (மலர்தலினின்றும் தோன்றிய முதுகாய்)

முதுகாய் - நெற்று

உழையினம் - மான் கூட்டம்

கவர்தல்- இரையாகக் கோடல்

அற்சிரம் - முன் பனிக்காலம்