குறுந்தொகை: பாடல் 69

குறுந்தொகை 69 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றென,

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,

ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்

சாரல் நாட! நடு நாள்

வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!

தோழி இரவுக்குறி மறுத்தது

கடுந்தோட் கரவீரன்

தாக்கலை- தா+கலை/தாவுகின்ற ஆண்குரங்கு

பெரும்பிறிது- இறப்பு

கைம்மை- கணவனை இழந்த நிலை

உய்யா -தாங்க இயலாத/ஏற்க இயலாத

காமர் மந்தி- துணையிடம் பெரிதும் விருப்பம் உடைய மந்தி

நடுநாள் -நடு இரவு

--------------------------------------------

பெரும் பிறிது (8 இடம்/முறை)

---------------------------------------------

குறுந்தொகை 68:1,372:2-3

நற்றிணை 219:1-4,381:1-2

அகநானூறு 55:1-4,253:2

புறநானூறு 152:2,368:8

குறுந்தொகை: குறிஞ்சி,பாலை

நற்றிணை:

பாலை,நெய்தல்

அகநானூறு:

பாலை

புறநானூறு:

பாடாண் திணை,பரிசில் துறை

வாகை, மறக்களவழி

நன்றி

http://tamil concordance.in