குறுந்தொகை: பாடல் 70
குறுந்தொகை 70 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே.
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
ஓரம்போகியார்
ஒடுங்கு ஈரோதி - இருபுறமும் ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலை உடையவள்
ஈரோதி, ஒண்ணுதல் - அன்மொழித்தொகை
இனையள் - இத்தன்மையள்
புனையளவு - சொல்லால் புனைந்து கூறும் எல்லை
