குறுந்தொகை: பாடல் 71
குறுந்தொகை 71 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இளமுலை,
பெருந்தோள், நுணுகிய நுசுப்பின்,
கல்கெழு கானவர் நல்குறு மகளே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.
கருவூர் ஓதஞானி
வைப்பு - செல்வத்திரட்சி
சுணங்கு - தேமல்
நுசுப்பு - இடை
நல்குதல் - கைமாறு கருதாது வழங்குதல்
