குறுந்தொகை: பாடல் 72

குறுந்தொகை 72 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து

எல்லாரும் அறிய நோய் செய்தனவே

தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப்

பரீஇ வித்திய ஏனல்

குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!

தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது

மள்ளனார்

அலமருதல் - சுழலுதல்

ஏ - அம்பு

மாமலை - பெரிய மலை

பரீஇ - பருவி /பருத்தி

ஏனல் - தினை

குரீஇ - குருவி

மழைக்கண் - கண்ணுக்குப் பண்பு உவமை