குறுந்தொகை: பாடல் 73
குறுந்தொகை 73 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி தோழி! நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது
பரணர்
மகிழ்நன் - தலைவன்
வெய்யை - விருப்பம் உடையாய்
வன்கண் - தறுகண்/ கருணையற்ற செயல்
வேண்டுமால் - வேண்டும்+ஆல் - அசை
--------------------------
