குறுந்தொகை: பாடல் 74

குறுந்தொகை 74 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

விட்ட குதிரை விசைப்பின் அன்ன,

விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்

யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்

வேனில் ஆனேறு போலச்

சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே.

தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது.

விட்ட குதிரையார்

விசைத்தல் - துள்ளி எழுதல்

விசைப்பின்- -இன் - சாரியை

படர்ந்தமை - தலைவியின் நினைவு, நினைத்தல் (படரே உள்ளல் செலவும் ஆகும் தொல்.உரியியல், நூற்பா.42) துன்பம்

சாயினன் - மெலிந்தான்

என்ப - அசை

மாண் நலம் - மாட்சிமைப்பட்ட நன்மை

-------------------------

நற்றிணை 78:9-12

குறுந்தொகை 54

புறநானூறு 302 : 1-2

ஐங்குறுநூறு 278