குறுந்தொகை: பாடல் 75
குறுந்தொகை 75 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்!
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?
தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது
படுமரத்து மோசிகீரனார்
ஒன்று - உண்மை
நசையினம்( தன்மைப் பன்மை )- விருப்பம் உடையோம்
மொழிமோ- -மோ முன்னிலை அசை
பெறீஇயர் - வியங்கோள் வினைமுற்று
நம்மைப் பிரிந்து சென்ற தலைவன் தேடும் செல்வம்/பொருள் இமயமலை அளவு இருக்குமோ ?
நந்தர் பாடலிபுரத்தில் கங்கை ஆற்றில் புதைத்து வைத்த செல்வத்தின் அளவு இருக்குமோ ?
-மாமூலனார்
(அகநானூறு 265 : 1-6)
--------------------------
