குறுந்தொகை: பாடல் 76

குறுந்தொகை 76 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

வெளியிட்ட காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்

செல்ப என்பவோ, கல் வரை மார்பர்

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை

பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,

தண் வரல் வாடை தூக்கும்

கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.

பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.

கிள்ளிமங்கலங்கிழார்

என்பவோ - ஓகாரம் இரக்கக் குறிப்பு

சிலம்பு - மலை

சேம்பு - செடி

அலங்கல் - அசைதல்

வள் இலை - வளப்பமான இலை

மான - ஒக்கும்படி

தைஇ - தடவி (சொல்லிசை அளபெடை)

தண்வரல் வாடை - குளிர்ந்த வாடைக் காற்று

தூக்கும் - அசையும்/உயர்த்தி அசைக்கும்

அற்சிரம் - முன்பனிக்காலம்

அஞர் - வருத்தம்