குறுந்தொகை: பாடல் 77
குறுந்தொகை 77 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
அம்ம வாழி, தோழி! யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தட மென் தோளே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார்
அம்ம - கேட்பிக்கும் இடைச்சொல்
வாழி - அசை
யாவதும் - ஒரு சிறிதும்
வம்பலர்- வழிச் செல்வோர்
பதுக்கை - இறந்தோர் உடலை இட்டு மூடிய கற்குவியல்/ இலைக்ககுவியல்/ திட்டு/ மேடு
அரிய - கடத்தற்கு அரிய
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பதுக்கை என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 14 இடங்களில் பயின்று வந்துள்ளன.பதக்கைத்து என்பது 2 இடங்களில் உள்ளன.
நன்றி: (http://tamil concordance.in)
