குறுந்தொகை: பாடல் 78
குறுந்தொகை 78 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!
நோதக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது.
நக்கீரனார்
கோடியர் - கூத்தர்
ததும்பி - முழங்கி/ஒலித்து
நோதக்கன்றே - வெறுக்கத்தக்கது
பேதைமைத்து - அறியாமை உடையது
செற்றார்பின் செல்லாப் பெருந்தகை காமநோய்
உற்றார் அறிவதுஒன்று அன்று
(குறள். 1255)
அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது
(குறள்.1291)
நன்றி http: //tamil concordance.in
