குறுந்தொகை: பாடல் 80

குறுந்தொகை 80 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,

பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி,

யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது

அஞ்சுவது உடையளாயின், வெம் போர்

நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி

முனை ஆன் பெரு நிரை போல,

கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.

ஒளவையார்

ஆம்பல் - மலர்

அடைச்சி - சூடி

கருந்துளை - பெரிய துறை

நன்றி http: //tamil concordance.in