குறுந்தொகை: பாடல் 81
குறுந்தொகை 81 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி,
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
பசு பனை - பசிய அரும்பு/புதிய அரும்பு
ஞாழல் - கொன்றை
ஒரு சிறை - ஒருபக்கம்
உதுக்காண் - சுட்டு
மா ,தெய்ய - அசை
கானல் - கடற்கரை,கழி ,உவர் நிலம், கடற்கரைச் சோலை
