குறுந்தொகை: பாடல் 82
குறுந்தொகை 82 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு,
''அழாஅல்'' என்று நம் அழுத கண் துடைப்பார்;
யார் ஆகுவர் கொல்? தோழி! சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால்
கொழுங் கொடி அவரை பூக்கும்
அரும் பனி அற்சிரம் வாராதோரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் ''வருவர்'' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.
கடுவன் மள்ளன்
வார்தல் - கோதுதல்
வணர் - சுருண்ட கூந்தல்
கதுப்பு - கூந்தல்
உளறுதல் - கோதுதல் /வகிர்தல்
புறம் - முதுகு
சேர்பு - சேர்ந்து
அழாஅல் - அழாதிரு
யாராகுவர் - எத்தன்மை உடையவர்
