குறுந்தொகை: பாடல் 83

குறுந்தொகை 83 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்

பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை

தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்

தீம் பழம் தூங்கும் பலவின்

ஓங்கு மலை நாடனை, ''வரும்'' என்றோளே!

தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது.

வெண்பூதன்

அரும்பெறல் அமிழ்தம்-- நல்வினை செய்தவர்க்கு உரிய அமிழ்தம்

பெரும் பெயர் உலகம் - மேல் உலகம்/ துறக்கம்(சொர்க்கம்)

பெறீஇயர்--பெறுக, வியங்கோள் வினைமுற்று,சொல்லிசை அளபெடை

தம் இல் --தமக்குரிய வீடு

தமது --அறநெறியால் ஈட்டிய உடைமை/பொருள்