குறுந்தொகை: பாடல் 85
குறுந்தொகை 85 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
யாரினும் இனியன்; பேர் அன்பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது.
வடம வண்ணக்கன் தாமோதரன்
குரீஇ - குருவி
துள்ளு நடைச் சேவல் - துள்ளித் துள்ளி நடக்கும் சேவல்
ஈன் இல் - முட்டை இடுவதற்குரிய கூடு
இழைஇயர் - கட்டுதல்,இழைத்தல்
தேம் - தேன்
கழை - கரும்பில் ஒரு வகை
கழைக்கரும்பு - இருபெயர் ஒட்டு
நாறா வெண்பூ - மணக்காத பூ/மணமற்ற பூ
யாணர் -புது வருவாய்
பாணன் வாய் - பாணன் பேச்சு
வாய்- சொல்(ஆகுபெயர்)/பாணன் வாய்ச்சொல்
