குறுந்தொகை: பாடல் 86
குறுந்தொகை 86 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்? உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
'ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
வெண்கொற்றன்
சிறைபனி -அடக்கிய/தடை (கண்ணீர்)
சேயரி -சிவந்த கோடு
உறை- மழைத்துளி
நுளம்பு -ஒருவகை மாட்டு ஈ
உலம்பும்-ஒலிக்கும்
உளம்பும் -அசையும்
