குறுந்தொகை: பாடல் 87

குறுந்தொகை 87 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

''மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉம்'' என்ப; யாவதும்

கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;

பசைஇப் பசந்தன்று, நுதலே;

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.

தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது.

கபிலர்

மன்றம் - ஊர்ப்பொதுவிடம்/அம்பலம்

மராஅம் - செங்கடம்பு (இசைநிறை அளபெடை)

பேஎம் - அச்சம் (இன்னிசை அளபெடை)

தெறூஉம் - தண்டிக்கும் என்று (இன்னிசை அளபெடை)

பசைஇ - விழைதல் பொருட்டு (சொல்லிசை அளபெடை)

பசந்தன்று - பசந்தது

ஞெகிழ - நெகிழ்தல் பொருட்டு

ஞெகிழ்ந்தன்று - நெகிழ்ந்தது