குறுந்தொகை: பாடல் 88

குறுந்தொகை 88 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,

சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்

தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல்,

நடு நாள் வருதலும் வரூஉம்;

வடு நாணலமே தோழி! நாமே.

இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது.

மதுரைக் கதக்கண்ணன்

ஒலி வெள்ளருவி - முழங்கும் அருவி

வயப்புலி - வலிமைமிக்க புலி

தொல் முரண்- பழைய வலிமை

துன்னுதல் - அணுகுதல்/அடைதல்

துன் அரும் சாரல் - நெருங்குவதற்கு அரிய சாரல்

வடு - பழி /தழும்பு

அருவி (162 முறை+37 பின் ஒட்டுக்களுடன்)

-------------

http://tamil concordance.in