குறுந்தொகை: பாடல் 89
குறுந்தொகை 89 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
பா அடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப;
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது
தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம்.
பரணர்
உரல -உரல் (உரல்+அ--அ சாரியை)
ஏதின் மாக்கள் - அயலோர்
பெரும்பூண்- பெரிய அணிகலன்
பொறையன் -சேர மன்னன்
கருங்கண் - கரியகண்/வன்மை
குடவரை -மேற்குப் பக்கம்
கொல்லிப்பாவை
---------------------------------
அகநானூறு 62:13-16,209:15-17
நற்றிணை
185:6-11,192:8-10
&
உரல (1 முறை)(உரல்+அ)அ-
----------
சாரியை
உரல்
-----------
(10 முறை+3பின் ஓட்டுக்கள் உடன்)
நன்றி- http://tamil concordance.in
