குறுந்தொகை: பாடல் 90
குறுந்தொகை 90 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
எற்றோ வாழி? தோழி! முற்றுபு
கறிவளர்அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப் புறமாகத் தோழி கூறியது.
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்
எற்றோ - வியப்பிடைச் சொல்
முற்றுபு- முற்றி/சூல் முதிர்ந்து
கறி- மிளகுக்கொடி
பொங்கு மயிர்க்கலை- குளிரால் மயிர் சிலிர்த்த ஆண் குரங்கு
கலை -ஆண்குரங்கு
