குறுந்தொகை: பாடல் 91

குறுந்தொகை 91 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி

குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்

தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்,

பல ஆகுக, நின் நெஞ்சில் படரே!

ஓவாது ஈயும் மாரி வண் கை,

கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி

கொன் முனை இரவு ஊர் போலச்

சில ஆகுக, நீ துஞ்சும் நாளே!

பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரைத்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிரிந்து வந்தவழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறியதூஉம் ஆம்.

ஒளவையார்

அரில் -பிணக்கம்

பவர்- பிரம்பு இருபெயரொட்டு

விளைகனி- வினைத்தொகை

குண்டு- ஆழம்

இலஞ்சி -குளம்

கதூஉம் கவ்வும்

தண்துறை- நீர்த்துறை

இனை- இன்னை (இடைக்குறை),தனித்துக் கிட,துயிலாத்துயர்

அஞ்சி - அதியமான் அஞ்சி

***

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது.(குறள் 1309)