குறுந்தொகை: பாடல் 92

குறுந்தொகை 92 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து

அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை,

இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த

பிள்ளை உள்வாய்ச் செரீஇய

இரை கொண்டமையின், விரையுமால் செலவே.

காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது.

தாமோதரன்

ஞாயிறு படுதல்- மறைதல்

அகல்வாய் வானம்- அகன்ற இடத்தை உடைய விசும்பு

கொடுஞ்சிறை- வளைந்த இறகுகள்

இறை -தங்குதல்/பறவையின்கூடு

நெறி- நடைவழி

மராஅம் -கடம்ப மரம்/கடப்ப மரம்

பிள்ளை- குஞ்சு

அகல்வாய் வானம் (92:1)

அகல்வாய்க்குண்டு சுனை(59:2)

அகல்வாய்ச்சிறுகுழி(233:1)

காலை அரும்பிப் பகல் எல்லாம் போதுஆகி/

மாலை மலரும்இந் நோய்

(குறள்.1227)