குறுந்தொகை: பாடல் 94

குறுந்தொகை 94 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து

அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;

யானே மருள்வென்? தோழி! பானாள்

இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்

என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?

அருவி மா மலைத் தத்தக்

கருவி மா மழைச் சிலைதரும் குரலே.

பருவம் கண்டு ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''ஆற்றுவல்'' என்பதுபடத் தலைமகள் சொல்லியது.

கதக்கண்ணன்

பானாள் - பால்+ நாள், பாதி நாள்,நள்ளிரவு

கொல் - அசைநிலை

சிலை- இடி

பிரிந்திசினோர்- பிரிந்தவர்