குறுந்தொகை: பாடல் 95

குறுந்தொகை 95 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

மால் வரை இழிதரும் தூ வெள் அருவி

கல் முகைத் ததும்பும் பன் மலர்ச்சாரல்

சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்

நீர் ஓரன்ன சாயல்

தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது

கபிலர்

மால் வரை -பெரிய மலை

இழிதருதல் -வீழ்தல்

கல் முகை - மலை முழைஞ்சு/குகை

ததும்பும் - குழங்கும்/முழங்கும்/குலுங்கும்

சாயல் - மென்மை

அவித்தல்- அடக்குதல்/கெடுத்தல்/துடைத்தல்/நீக்குதல்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்/

நண்ணாரும் உட்குமென் பீடு

(குறள்.1088)

மால்20 வரை19 இழி18தரும்17தூ16 வெள்15 அருவி14

கல்13 முகைத்12 ததும்பும்11 பல்10 மலர்ச்9 சாரல்8

சிறு7குடிக்6 குறவன்5 பெருந்4 தோட்3 குறு2மகள்1

நீர் ஓரன்ன சாயல்

தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.