குறுந்தொகை: பாடல் 97

குறுந்தொகை 97 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

யானே ஈண்டையேனே; என் நலனே

ஆனா நோயொடு கானலஃதே.

துறைவன் தம் ஊரானே;

மறை அலர் ஆகி மன்றத்தஃதே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

வெண்பூதி

ஈண்டையேன்- இவ்விடத்தேன்

ஆனா நோய்- பிரிந்து அமையாத துன்பம்

துறைவன்- நெய்தல் தலைவன்

மறை -களவு மணம்

அலர் - பலர் அறிந்து கூறும் பழிச்சொல்மன்றம் - ஊர்ப்பொது இடம்