குறுந்தொகை: பாடல் 98

குறுந்தொகை 98 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

''இன்னள் ஆயினள் நன்னுதல்'' என்று, அவர்த்

துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,

நன்றுமன் வாழி தோழி! நம் படப்பை

நீர் வார் பைம் புதற் கலித்த

மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

கோக்குளமுற்றன்

இன்னள் -இத்தன்மையள்

துன்னல் - நெருங்குதல்

மன்- ஒழியிசை; கைகூடவில்லை

படப்பை- தோட்டம்

நன்னுதல்- அன்மொழித்தொகை