குறுந்தொகை: பாடல் 99
குறுந்தொகை 99 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். ''எம்மை நினைத்தும் அறிதிரோ?'' என்ற தோழிக்குச் சொல்லியது
ஒளவையார்
உள்ளுதல்- இடையறாது எண்ணுதல்
மலிர் நிறை - மிக்க வெள்ளம்
