குறுந்தொகை: பாடல் 100

குறுந்தொகை 100 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்

பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்

காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,

கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்

வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்

பாவையின் மடவந்தனளே-

மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.

பாங்கற்கு உரைத்தது

அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்

கபிலர்

பருவிலை - பெரிய இலை

குளவி - மலை மல்லிகை

மரல் - ஒரு வகைக் கற்றாழை(செடி)

கட்கும் - களை பறிக்கும்

காந்தள்வேலி- பண்புத்தொகை

சிறுகுடி- மலையக மக்கள் ஊர்

கோடு - மருப்பு

நொடுத்து - விற்று

வல் வில் ஓரி - வில் தொழிலில் வன்மை உடைய ஓரி

http://tamil concordance .co.in