குறுந்தொகை: பாடல் 101
குறுந்தொகை 101 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
(பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம்
பரூஉ மோவாய்ப் பதுமன்
தூக்குதல் - நிறைகாண்டல்
தோள்மாறுபடும் வைகல் - தழுவுதல்
வைகல் - வைகுதல், தங்குதல், புணர்தல்
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்/
ஒண்தொடி கண்ணே உள.(குறள் 1101)
