குறுந்தொகை: பாடல் 102
குறுந்தொகை 102 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே.
''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, ''யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?'' என்றது
ஒளவையார்
உள்ளுதல் - நினைத்தல்
வேம் - வேகின்றது
காமம் -:ஆசை ,விருப்பம், புலன் சார்ந்த இன்பம்
சான்றோர் - அருளுடையவர்
மரீஇயோர் - மருவியோர்,
தன்னைத் தழுவியவர்
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனின் பெரிது.
(குறள் 1166)
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
(குறள்.1159)
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு.
(குறள்.1281)
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்அற்றே கள்வநின் மார்பு.
(குறள் 1288)
