குறுந்தொகை: பாடல் 103

குறுந்தொகை 103 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,

கவிர் இதழ் அன்ன தூவிச் செவ் வாய்,

இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்

தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்

வாரார் போல்வர், நம் காதலர்;

வாழேன் போல்வல் தோழி! யானே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

வாயிலான் தேவன்

கடும் புனல் - கடிதாக ஓடும் நீர்

அஞர் - வருத்தம்

அள்ளல் - சேறு

கவிர் - முள்முருங்கை

தூவி - இறகு

எவ்வம் - துயரம்

தூஉம் - தூவு கின்ற

துயர் கூர் வாடை - துன்பம் மிகக் காரணமான வாடை