குறுந்தொகை: பாடல் 104

குறுந்தொகை 104 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

வாழி, தோழி! காதலர்,அம்ம.

நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,

தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்

பனி படு நாளே, பிரிந்தனர்;

பிரியும் நாளும் பல ஆகுபவே!

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது;

''சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?'' என்ற

தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம்.

காவன்முல்லைப் பூதனார்

அம்ம - கேட்பிக்கும் சொல்

வாழி - வாழ்வாயாக

நூல் - முத்து மாலையில் உள்ள கோர்க்கும் நூல்

சிதர் - துளி

உறைத்தல் - துளிர்த்தல்

தாளி - அறுகம்புல்

பவர் - அடர்ந்த கொடி

நாள் - விடியற்காலம்