குறுந்தொகை: பாடல் 105
குறுந்தொகை 105 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
நக்கீரர்
புனவன் - குறவன்
துடவை - தோட்டம்
கடி உண் - புதிய உணவு
செழுங்குரல் - செழுமையான கதிர்
ஆடுமகள் - விறலி , தேவராட்டி
வெய்துற்று - வெய்துறு , வருத்தம் உறு
சூர் - அச்சம், துன்பம்
கொடுந்தெய்வம் - வருத்தும் தெய்வம்
