குறுந்தொகை: பாடல் 106
குறுந்தொகை 106 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று வாழி, தோழி! நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
தான் மணந்தனையம்'' என விடுகம் தூதே.
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது
கபிலர்
இற்றி -மரம்
இவர் -படர்தல்
கிளவி -சொல்
வயின் -இட வேற்றுமை உருபு
வந்தன்று -வந்தது
நன்றி: http://tamil concordance.in
