குறுந்தொகை: பாடல் 107

குறுந்தொகை 107 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன

தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!

நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்

பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகி,

கடு நவைப் படீஇயரோ, நீயே நெடு நீர்

யாணர் ஊரனொடு வதிந்த

ஏம இன் துயில் எடுப்பியோயே!

பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது.

மதுரைக் கண்ணனார்

இணர் - கொத்து

தோன்றி - செங் காந்தள்

தொகு செந் நெற்றி- சிவப்பு நிறம் தொகுப்பாக/தொடர்ச்சியாக இருக்கும் கொண்டை உடைய சேவல்

நெற்றி -:சேவலின் கொண்டைக்கு ஆகு பெயர்

நள்ளிருள் - செறிந்த இருள்

கணம் - திரள்

இல் எலி - வீட்டு எலி

பார்க்கும் - ஆராயும்

பிள்ளை வெருகு - காட்டுப் பூனையின் குட்டி

கடு நவை - துன்பம்

படீஇயரோ - படுவாயாக

ஏமம் -:இன்பம்

துயில் -:தூக்கம்

எடுப்பியோயே - எழுப்பியதால்