குறுந்தொகை: பாடல் 108
குறுந்தொகை 108 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல் தோழி! யானே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது.
வாயிலான் தேவன்
புறவு - முல்லை நிலம்
பாசிலை - பசிய இலை
ஆசு - குற்றம்
வான் பூ - வெள்ளிய பூ
செவ் வான் - சிவந்த வானம், செக்கர் வானம்
கொண்டன்று - கொண்டது
உய்யேன் - வாழேன்
யானே -ஏகாரம் பிரிநிலை
