குறுந்தொகை: பாடல் 109
குறுந்தொகை 109 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்,
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது.
நம்பி குட்டுவன்
முட் கால் - முள் போன்ற கால்கள்
முடங்கு புறம் - இறால் மீனின் முதுகு , வளைந்த முதுகு
பெருங் கிளை - இறால் மீன் கூட்டம்
இகுதல் - தாழ்தல்
புணரிய - புணருவதற்கு
(வினை எச்சம்)
இன்னது - பசலை
கவின் - அழகு
