குறுந்தொகை: பாடல் 110
குறுந்தொகை 110 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி! நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது;
தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம்.
கிள்ளிமங்கலம் கிழார்
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்/
உள்ளம்உடைந்து உக்கக் கால். (குறள் 1270)
நீலம் - குவளை
போது - மலரும் பருவத்தில் உள்ள அரும்பு
உளரி - அசைத்து
புதல - புதரில்
பீலி - மயிற்பீலி
கருவிளை - மலர்
ஆட்டி -:அசைத்து
ஈங்கை - ஈச்சமரம்/ ஈந்து
ஊழ்த்த - மலர்ந்த
துய்ம் மலர் - மென்மையான பஞ்சு போன்ற மலர்/மெல்லிதழ் உடைய மலர்
எறி தரும் (வாடை) - வீசும்
-------------------------
நீர [10](1)
புதல [2](1)
ஆட்டி [14](2)
ஊழ்த்த[8](3)
உதிர[22](3)
வண்ணத் துய்ம்மலர்[2](2)
வண்ணச்சினைச்சொல்
http://tamil concordance.co.in
நன்றி
ஈச்ச முட்டி எடுத்தல்
-------------------------------------
Pattakathi village vlogs
OTTA CETTI
