குறுந்தொகை: பாடல் 111

குறுந்தொகை 111 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்,

''வென்றி நெடு வேள்'' என்னும்; அன்னையும்,

அது என உணரும் ஆயின், ஆயிடைக்

கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன

கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன்

வல்லே வருக தோழி! நம்

இல்லோர் பெரு நகை காணிய சிறிதே!

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.

தீன்மதிநாகன்

செல்லல் - வருத்தம்

வேலன் - வேல் மகன்

நெடு வேல் - நீண்ட புகழை உடைய முருக வேள், முருகன்

கூழை - குறிய

கேழ் இருந் துறுகல் - நிறத்தால் கரிய குண்டுக் கல்

வல்லே - உரிச்சொல் விரைவாக,விரைந்து